85 வயசுல, எட்டாத உயரத்துல, கெத்து காட்டிய மூதாட்டி

#world_news #Breakingnews
Mani
2 years ago
85 வயசுல, எட்டாத உயரத்துல, கெத்து காட்டிய மூதாட்டி

இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி ஒருவர் உலகின் அதிவேக ஜிப்லைனில் பயணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கனவுகளுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறார் 85 வயதாகும் மூதாட்டியான சாலி வெப்ஸ்டர். சிறுவயதிலிருந்தே தன்னை பல்வேறு சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகளுக்கு எல்லையே இல்லை என்றே கூறலாம்.

இங்கிலாந்தில் கேர் ஹோமில் வசித்து வரும் இவர் வேல்ஸ் நகரில், கடந்த செவ்வாயன்று, 52 வயதான, யோகா ஆசிரியரான தனது மகள் ஜூலியட்டுடன், 1.5 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 500 அடி உயரமான, உலகின் அதிவேக ஜிப் லைனில் சவாரி செய்துள்ளார்.

இளம் வயதினரே சற்று தயங்கும் அந்த ஜிப்லைன் சாகசத்தில் பாதுகாப்பு கியர் மற்றும் கண்ணாடிகளை அணிந்து சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து சாலி வெப்ஸ்டர் அசத்தியிருக்கின்றார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியதால் மூதாட்டியின் சாகசத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!