தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து பல முக்கிய நகரங்களில் எதிர்ப்பு
#SriLanka
#Sri Lanka President
#Election
#Protest
Mayoorikka
2 years ago
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று பல முக்கிய நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்..
தங்காலை, களுத்துறை, மஹரகம மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தடுக்க அரசாங்கம் கோழைத்தனமான முயற்சியை மேற்கொள்வதாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.