மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேர்தல் ஆணையம்!
#SriLanka
#Election
#Election Commission
#Court Order
#Lanka4
Mayoorikka
2 years ago

வாக்குறுதியளித்தபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பிரேரணை மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அச்சகத்தினால் அச்சுப் பணிகள் தாமதம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் போதிய எரிபொருளை வழங்காமை, அச்சகத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்காமை தொடர்பில் உரிய பிரேரணையில் தெரிவிக்கப்படும் என நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் வழங்க முடியாது என பொது திறைசேரி நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மீண்டும் அறிவித்தது



