மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி; மூன்று பேருக்கு போலீசார் வலை வீச்சு

#Student #School Student #Murder #Breakingnews
Mani
2 years ago
மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி; மூன்று பேருக்கு போலீசார் வலை வீச்சு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் சுவிதாவுக்கு 17 வயது. இவர் தற்போது கடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் தினமும் நல்லூர் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சுவிதாவின் கழுத்தை பிளேடால் அறுத்தனர். ரத்தம் கசிவதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
சுவிதாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!