நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது
#Cinema
#India
#Actor
Mani
2 years ago

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான கன்னடப் படம் காந்தாரா ரூ.400 கோடி வசூல் செய்தது. கர்நாடகாவில் வாழும் பழங்குடியின மக்களின் மத வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 20ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



