ட்விட்டரில் ரசிகை போட்ட 'ட்விட்' பதிலளித்த ஏ ஆர் ரகுமான்
#Cinema
#TamilCinema
Mani
2 years ago
-1.jpg)
1992ல் 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், இன்றும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு எப்போதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் இவரது இசை நிகழ்ச்சி மலேசியாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து புனேயில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரசிகை ஒருவர் , 'ஏன் சென்னையில் கச்சேரி நடத்தக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க நீண்ட காலம் ஆவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஆறு மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



