'லியோ' படத்தின் டைட்டில் பாடல்- சிங்கிளாக வெளியிட ரசிகர்கள் அனிருத்திடம் கோரிக்கை .

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக இணைந்தனர். 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக தளபதி 67 மாறியுள்ளது. லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற எல்.சி.யு.வின் கீழ் இப்படம் உருவாகிறது. இதனால், 'கைதி' படத்தில் வரும் கார்த்தி, ரோலக்ஸ் சூர்யா, கமல் ஆகியோர் 'லியோ'வில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
"லியோ" படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், த்ரிஷா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலி கான் மற்றும் சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்கீயர்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டின் ப்ரோமோஷன் வீடியோவில் அனிருத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை சிங்கிளாக வெளியிட வேண்டும் என ரசிகர்கள் அனிருத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் இந்த பாடல் எப்படி உருவானது என்ற தகவலை அனிருத் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 'லியோ' படத்தில் அனிருத்தின் இன்னொரு சம்பவம் நடக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19ஆம் தேதி 'லியோ' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



