திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய ஐந்து நடிகைகள்

பொதுவாக ஹீரோயின்கள் தங்களது மார்க்கெட் உள்ள போதே நிறைய படங்களில் நடித்து பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் நடிகைகளுக்கு கல்யாணத்துக்கு பிறகு பட வாய்ப்பு வருவது குறைவுதான். ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என முழுக்க போட்டனர். ஆனால் சில காரணங்களினால் அவர்கள் மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தனர். அந்த 5 நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
பத்மினி : சிவாஜி, எம்ஜிஆர் காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பத்மினி. இவர் திருமணம் முடித்த கையோடு இனி சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். ஆனால் காலத்தின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு பிறகு தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சரண்யா பொன்வண்ணன் : ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சரண்யா பொன்வண்ணன் இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு முழுக்க போட்ட நினைத்த இவருக்கு தான் இப்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஜோதிகா : டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும்போதே நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் ரீ என்ட்ரி அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அமலா பால் : அமலா பால் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில வருடங்களில் இவர்களுக்கு மனம் கசப்பு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பை விட இப்போது விவாகரத்து பெற்றவுடன் அமலாபால் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
சிம்ரன் : பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக இருந்த சிம்ரன் திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தார். ஆனால் கல்லா காலியானதால் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அதுவும் வில்லி, அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தான் தற்போது சிம்ரன் அதிகம் நடித்து வருகிறார்.



