அஜித்தின் ஏகே 62 படத்தை குறித்த அப்டேட்டை வெளிப்படுத்தப் போகும் லண்டன் புகைப்படம் விரைவில்

பொங்கலுக்கு திரையில் மோதி கொண்ட அஜித், விஜய் இருவரும் இப்போது அவர்களது அடுத்த படத்தில் நடிப்பதற்கு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அடங்கிய ப்ரோமோ வீடியோவில் விஜய் மிரட்டிவிட்டிருப்பார்.
இதனால் அந்தப் ப்ரோமோவை பார்த்த பிறகு அஜித்தின் அடுத்த படம் எந்த அளவிற்கு தரமாக இருக்க வேண்டும் என்பது பெரிய போராட்டமாய் இருக்கிறது. அதிலும் பத்தாது ஏகே 62 படத்தின் இயக்குனராக சொல்லப்பட்ட விக்னேஷ் சிவன், அந்தப் படத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் அடுத்த இயக்குனர் யார் என்பது பற்றியும், ஏகே 62 படத்தை குறித்த முழு அப்டேட்டும் லண்டனில் இருந்து வெளி வருகிறது. கிட்டத்தட்ட இயக்குனர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டது.
மகிழ் திருமேனிக்கு லண்டனுக்கு டிக்கெட் போட்டாச்சு. அவர் கூடிய விரைவில் கிளம்ப இருக்கிறார். லண்டனில் இவர்கள் முக்கியமான மீட்டிங் நடத்த போகிறார்கள். அது முடிந்தவுடன் வெளிவரப் போகும் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோ தான் கிட்டத்தட்ட அந்த செய்தியை 100% உறுதிப்படுத்தும்.
அஜித், மகிழ் திருமேனி, லைக்கா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளான தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் ஆகிய நான்கு பேரும் மீட் பண்ண போகிறார்கள். கூடிய விரைவில் இந்த நான்கு பேர் அடங்கிய புகைப்படம் லண்டனில் இருந்து வெளியாகி ஏகே 62 படத்தின் கூட்டணியை உறுதி செய்யப் போகிறது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் லண்டனில் இருக்கும் அஜித்தை எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம் என்று சென்றபோது, அவருடைய கதை சுத்தமாக பிடிக்கவில்லை என்று அஜித் மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லி விட்டார். இப்போது இந்த 3 பேரும் லண்டனுக்கு கிளம்பி போய் ஏகே 62 படத்தின் அப்டேட்டை உறுதிப்படுத்தப் போகின்றனர்.



