AK62 படத்தில் இருந்து விலகிய விக்கி- அப்போ அந்த விஷயம் உண்மைதான் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இணையும் 'லியோ' டைட்டில் வெளியாகி இணையத்தை கலக்கி வரும் நிலையில் மற்றொரு பக்கம் தங்கள் ஹீரோவின் அடுத்த இயக்குனர் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள்.துணிவு படத்தை தொடர்ந்து உருவாக உள்ள ஏகே62 படத்தை யார் இயக்குகிறார்கள் என்பதை கோலிவுட்டில் தற்போதைய மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் துணிவு பட ரிலீஸுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது ஆனால் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக எழுதிய கதை அவருக்கும்,தயாரிப்பு நிறுவனத்திற்கும் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்படத்தில் இருந்து அவர் விலகி உள்ளதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது ஆனால் இந்த செய்தி எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ட்விட்டரில் இருந்து அஜித்தின் கவர் பிக்சரை மாற்றியுள்ள விக்னேஷ் சிவன், பயோவில் ஏகே 62 என இருப்பதை தூக்கிவிட்டு தற்போது விக்கி6 என மாற்றியுள்ளார். இதனால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி தடையறத் தாக்க,மிகாமன்,தடம் உள்ளிட்ட ஆக்சன் படங்களை இயக்கியுள்ளார்,ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது விக்கி படத்திலிருந்து வெளியேறியுள்ளதாக உறுதியாகிறது ஆனால் இப்படத்தை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



