தளபதிக்கு என்றே இருந்த பிராண்டை உடைத்த லோகேஷ் கனகராஜ்.

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லியோ என்பதை வெளிப்படுத்தும் தளபதி 67 படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது தான் ரிலீஸ் ஆகினது. இந்த ப்ரோமோவில் விஜய்யின் ஒட்டுமொத்த பிராண்டையும் லோகேஷ் கிளோஸ் செய்து விட்டார்.
ஏனென்றால் ஹாலிவுட்டுக்கு நிகரான ப்ரோமோவை கொடுத்து அசத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவரோட தனி ஸ்டைலில் வெளியாகி பட்டையை கிளப்பியது இந்த ப்ரோமோ. இந்த ப்ரோமோவை பார்த்தவர்களை எப்படியும் இரண்டு மூன்று முறையாவது பார்ப்பார்கள்.
முன்பெல்லாம் இந்த மாதிரி ப்ரோமோ வெளிவந்தால் ரசிகர்கள் எல்லோரும் விஜய்க்காக பார்ப்பார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் வருவதையே மறந்து விட்டார்கள் முழுக்க முழுக்க லோகேஷ் படமாகவே இது பார்க்கப்பட்டது. மொத்தத்தில் இந்த படத்தில் விஜய் பிராண்ட்டையே க்ளோஸ் பண்ணி விடுவார் லோகேஷ்.
விஜய் என்றால் பட்டையை கிளப்பும் பாடல்கள், டான்ஸ் என்பது இந்த படத்தில் இருக்காது. இது முழுக்க முழுக்க லோகேஷ் படம். தற்போது விஜயின் லியோ படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் லோகேஷ் பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் பெரும்பாலும் நைட் தான் செய்கிறார் லோகேஷ்.
இவர் கதைகளும் இரவு நேரம் சம்பந்தமாகவே வரும். நைட் எடுப்பது மிகவும் சிரமம். ஆனால் இவர் சென்டிமென்டாக நைட் எடுத்தால் படம் சக்சஸ் என்கிறார். அப்படி லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலஹாசனை எப்படி கொடூரமான ஏஜென்ட் ஆக காட்டினாரோ அதேபோல் லியோ படத்தில் விஜய்யும் காட்டப் போகிறார்.
எனவே கமலஹாசனின் 60 ஆண்டு சினிமா கால வரலாற்றை லோகேஷின் விக்ரம் படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கே சென்றார். அதேபோல் விஜய்க்கும் லியோ படத்தின் மூலம், இதற்கு முன்பு தளபதிக்கு என்று இருந்த பிராண்டை உடைத்து வேற லெவலுக்கு உயர்த்த போகிறார்.



