பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு

#Phillipines #Flight #Accident #Death #world_news #Tamilnews
Prasu
2 years ago
பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில்  2 விமானிகள் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. 

விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. 

இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!