ஆர்ஆர்ஆர் படக் குழுவில் ஒருவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

இன்று 74-வது குடியரசு தினத்தை நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் குடியரசு தினத்தை முன்னிட்டு சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தின நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலருக்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் ஆஸ்கர் போட்டியிலேயே நாமினேட்டான ஆர்ஆர்ஆர் படக் குழுவில் ஒருவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் பல விருதுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கு இப்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது அந்த படக்குழுவினருக்கு பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அடுத்ததாக வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதையும் அவர் வெல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி விட்ட பாலிவுட் நடிகை ரவீனா டான்டன்னுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்திய திரை உலகில் ஈடு இணையற்ற பின்னணி பாடகியால வாணி ஜெயராமை கௌரவிக்கும் விதத்தில் அவருக்கும் இந்த ஆண்டில் பத்மபூஷன் விருதை வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளனர். இவர் ஹிந்தி, தமிழ் என இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட பாடல்களை பாடி அசத்தியவர்
அதுமட்டுமின்றி மட்டுமல்லாமல் தெய்வீக குரலுக்கு சொந்தக்காரரான வாணி ஜெயராமுக்கு விருது அறிவித்திருப்பது குறித்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.



