பிரித்தானியா மகாராணியின் மறைவின் பின் அவுஸ்ரேலியாவில் அதிகரித்துள்ள குடியாட்சி விளம்பரப்படுத்தல்கள்!

#world_news #Tamilnews #Lanka4 #Britain #Queen_Elizabeth #Australia
Nila
2 years ago
பிரித்தானியா மகாராணியின்  மறைவின் பின் அவுஸ்ரேலியாவில் அதிகரித்துள்ள குடியாட்சி  விளம்பரப்படுத்தல்கள்!

பிரித்தானியா மகாராணியாரின்  மறைவை தொடர்ந்து பெரும்பாலான அவுஸ்ரேலியர்கள் குடியாட்சி தொடர்பான விளம்பரபடுத்தல்களை அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 

இளவரசர் ஹரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் நிலை, முடியாட்சிக்கான உறவை முறித்துக்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், ராணி எலிசபத்தின் மறைவுக்கு பிறகு நான்கே மாதங்களில் குடியரசுக்கான ஆதரவு 36 வீதம் முதல் 39 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராணி உயிரிழந்த சில வாரங்களின் பின் குடியரசு கட்சிக்கான ஊக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் 30 வீதமானோர் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.  

அதேநேரம் இளவரசர் ஹரியின் வெளிபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்களில் 21 சதவீதமானோர் அந்த கதைகள் தங்கள் பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடியரசுக்கான அவர்களின் ஆதரவை அதிகரித்ததா அல்லது குறைத்ததா என்பதில் அவர்கள் பிளவுப்பட்ட கருத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

21 சதவீதமானோரில் 14 சதவீதமானோர் குடியரசை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!