நியூஸிலாந்தின் புதிய பிரதமராக கிரிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு - கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்றார் ஜெசிந்தா !

#world_news #Lanka4 #Tamilnews #Newzealand #President
Nila
2 years ago
நியூஸிலாந்தின் புதிய பிரதமராக கிரிஸ் ஹிப்கின்ஸ்  பதவியேற்பு - கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்றார் ஜெசிந்தா !

நியூஸிலாந்தில் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் இன்று  தொழிற்கட்சித் தலைவர் கிரிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins)  நியூசிலாந்தின் 41வது பிரதமராக  அதிகாரபூர்வமாய்ப் பதவியேற்றுள்ளார். 

ஆர்டன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறும்போது நூற்றுக் கணக்கானோர் அவரைக் காண நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்  நாடாமன்ற உறுப்பினர்கள் பலர் கண்ணீர் மல்க அவர் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.ஹிப்கின்ஸ், இதுவரை அவரது கொள்கைகள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.அவரது முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று பின்னேரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

COVID-19 நோய்ப்பரவலின்போது, ஹிப்கின்ஸ் முக்கியப் பொறுப்பு வகித்திருந்தார். நியூஸிலந்தில், வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.அப்போது ஹிப்கின்ஸ் பிரதமர் பதவியில் தொடர்வதற்குக் கடினமான போட்டியை எதிர்நோக்கலாமெனக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!