தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் தொடர்ந்து செய்து வரும் தவறு

கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்கள்தான் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய். கோலிவுட்டின் மொத்த பொருளாதாரமும் இவர்களின் படங்களை நம்பித்தான் இருக்கின்றன. மேலும் மற்ற நடிகர்களை ஒப்பிடும் போது இவர்கள் இருவருக்கும் அதிகமான மாஸ் உண்டு. தயாரிப்பாளர்கள் இவர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றனர்.
சமீப காலமாக இவர்கள் இருவர்களுடைய படங்களிலும் முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் மற்ற மொழி நடிகைகளை தான் ஹீரோயின்களாக நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் இந்த இரண்டு ஹீரோக்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுதான்.
அதாவது இவர்களுடைய படங்களில் புதுமுக ஹீரோயின்கள் யாரையும் அறிமுகப்படுத்த முடியாது. அதே நேரத்தில் முன்னணி ஹீரோயின்களை இவர்கள் படத்தில் நடிக்க வைத்தாலும், இவர்கள் இருவரும் தங்களுக்கான மாஸை காட்ட வேண்டும் என்பதால் ஹீரோயின்களை பொம்மையாகவே பயன்படுத்துகிறார்கள்.
இப்போதெல்லாம் ஹீரோயின்கள் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த இரண்டு ஹீரோக்களும் தங்களின் படங்களில் கதாநாயகிகளுக்கு கொடுப்பதே இல்லை. வெறும் காதல் காட்சி, பாடலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகிகளுக்கு காதல் காட்சிகள் நினைத்தாலும் அந்தப் படத்தில் அவர்களுக்கென்று ஒரு முக்கியத்துவம் இருக்கும். அதேபோன்றுதான் நடிகர் அஜித்தும். அவருடைய படங்களை எடுத்துக்கொண்டால் கதாநாயகிகளுக்கு கதை ஓட்டத்தில் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் இருக்கும்.
சமீப காலமாகவே எல்லா ஹீரோக்களும் ஹீரோயின்களுக்கு தங்கள் படங்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். திரைக்கதைகளையும் அப்படிதான் அமைக்கின்றனர். ஆனால் சினிமா உலகில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மட்டும் தங்களுடைய இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்து வருகிறார்கள்.



