வாரிசு படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு விஜய் கொடுத்த ட்ரீட்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த 11-ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 10 நாட்களுக்கு மேலாக பல திரையரங்குகளில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பேமிலி ஆடியன்ஸை கவரும் விதத்தில் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுத்ததால் உலகெங்கும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடியையும் தமிழகத்தில் மட்டும் 100 கோடியையும் எட்டியது.
இதனால் விஜய் ஹைதராபாத்தில் பிரபல நட்சத்திர விடுதியில் வாரிசு பட குழுவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்திருக்கிறார். இதில் தளபதி விஜய்யின் பெயர் மற்றும் வாரிசு, கேமரா ரோல், கேமரா உள்ளிட்டவை இடம் பெற்ற சிகப்பு நிற பிரம்மாண்ட கேக் ஒன்றை ஏற்பாடு செய்து அதை படக்குழுவினருடன் கேக் வெட்டி தளபதி விஜய் கொண்டாடினார்.
தற்போது விஜய் பட குழுவினருக்கு கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்கள் மற்றும் சக்சஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த சக்சஸ் மீட்டிங்கில் படத்தின் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியரும் வாரிசு படத்தில் வசனகர்த்தாவான விவேக், நடிகர் ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



