ஜெயிலர் திரைப்படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் இணையும் பிரபல நடிகை தமன்னா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர்‘ திரைப்படத்தின் தகவல்கள் அதிரடியாக வெளிவருகின்றன.
ஏற்கனவே, ‘ஜெயிலர்‘ படத்தில் ரஜினியுடன் மேலும் இரண்டு சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் நடிப்பதாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களுடன் வரப்போகும் ஜெயிலர் இரசிகர்களுக்குப் பெரும் விருந்தாகப் போகிறது.
இதையடுத்து, தற்போது ‘ஜெயிலர்‘ படத்தில் தமன்னா நடிக்கவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகிவருகிறது.
மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் ரம்யா கிருஸ்ணன், விநாயகன், வசந்த் ரவி, அறந்தாங்கி நிசா, யோகிபாபு மற்றும் பருத்திவீரன் சரவணன் உட்பட பலர் ‘ஜெயிலர்‘ படத்தில் நடிக்கின்றனர்.
இந்தக் கூட்டணியில் தற்போது தமன்னாவும் இணைந்துள்ளமை இரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



