விஜயகாந்தை கண்கலங்க வைத்த அஜித்

கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும்பொழுது நடிகர் சங்கத்தில் கடன் அதிகமாக இருந்தது. அந்த கடனை அடைப்பதற்காக மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருவார். அந்த சமயம் சினிமா கலைஞர்கள் அனைவரையும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாதிரியான கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்கத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் கடனை அடைத்தது போக மீதமான தொகையை டெபாசிட் செய்திருக்கிறார். இப்படி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ் சினிமா துறைக்கு வழிகாட்டியாக இருந்தவர்.
மேலும் ஒரு நாளில் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்த போது அஜித்தை தவிர மற்ற நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். அஜித் மட்டும் வராமல் போனது இவருக்கு அஜித் மீது ஒரு கோபம் இருந்தது. பின்பு அஜித் கேப்டன் வீட்டிற்கு சென்று இவரால் வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு இவரின் சார்பாக ஒரு தொகையை கொடுத்திருக்கிறார்.
ஆனால் கோபத்தில் இருந்த விஜயகாந்த் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டார். இது அஜித்திற்கு பெரிய அளவில் மன கஷ்டத்தை ஏற்படுத்தியது. பின்பு விஜயகாந்த்திடம் இவரால் வர முடியாத காரணத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
சொன்னதோடு மட்டுமல்லாமல் இவரின் சட்டையை கழற்றி என் உடம்பை பாருங்கள் எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கு இந்த உடல்நிலை காரணமாக தான் என்னால் அவ்வளவு தூரத்தில் கலை நிகழ்ச்சிகள் வந்து கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லி இருக்கிறார்.
உடனே இதைக் கேட்ட கேப்டன் கண் கலங்கிவிட்டார். பின்னர் அவர் அஜித்திடம் இதை நீ ஏன் என்னிடம் சொல்லல என்று சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால் ஊடகத்தில் அஜித்திற்கும், விஜயகாந்த்துக்கும் ஏதோ பெரிய பிரச்சனை நடந்திருக்கிறது என்று போட்டுவிட்டார்கள். ஆனால் உண்மையிலேயே இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இப்ப வர இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.



