சினிமா துறை,டிவி சேனலையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமா துறையில் இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக கொண்டுள்ளார். இதன் மூலம் நிறைய முக்கியமான படங்களை நல்ல முறையில் வெளியிட்டு வந்த இவர் இப்பொழுது அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் அமைச்சரான பிறகு இனிமேல் இவரால் சினிமாவிற்கு எந்தவித தொந்தரவும் இருக்காது என்று நினைத்த ஒரு சில பிரபலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அரசியல் வேறு, சினிமா வேறு என்று சுட்டிக்காட்டும் வகையில் இவர் சினிமா விட்டு விலகாமல் இன்னும் அதிகமாகவே அனைத்து படங்களையும் எடுத்து தனது நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார்.
இது சில முக்கிய நடிகர்களுக்கு பெரிய தலைவலியாக அமைகிறது. சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது டிவி சேனலையும் தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய இவர் அடுத்தகட்ட செயலில் இறங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் பிளாக் ஷீப் என்பது ஒரு என்டர்டைன்மென்ட் மட்டும் பண்ணக்கூடிய ஒரு யூடிப் சேனலாக மட்டுமே இருந்தது.
இது ஆர்ஜே விக்னேஷ் மற்றும் அரவிந்த் இருவராலும் நடத்தப்பட்டு வருகிறது. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூடிப் சேனலின் விளம்பரத்தின் மூலம் பிளாக் ஷீப் சேனல் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த சேனலை 2000 கோடி கொடுத்து வாங்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் கொஞ்சம் காலமாகவே திரைப்படங்களை வெளியிடுவதற்கு சில முக்கிய நிறுவனங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ், நெட் பிளிக்ஸ் நிறுவனம் எல்லாருக்கும் தெரிந்தது. இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் படங்களை மொத்தமாக தூக்குவதற்கு 2000 கோடி செலவு செய்து வருகிறது நெட் பிளிக்ஸ் நிறுவனமும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வரிசையாக போட்டி போட்டுக்கொண்டு படங்களை வாங்குவதற்கு சில முன்னணி நிறுவனங்கள் அதிகமாக செலவு செய்து சினிமாவை அவர்கள் கண்ட்ரோலில் வைக்க திட்டமிடுவதாக தெரிய வருகிறது. இந்த வரிசையில் தற்போது உதயநிதியும் இறங்கியுள்ளார்.



