பிரித்தானியாவில் இரட்டை அடுக்கு பேருந்து கவிழ்ந்து விபத்து -பலர் காயம்!
Nila
2 years ago
சோமர் செட்டில் இரட்டை அடுக்கு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Hinkley Point C அணுமின் நிலையத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.