சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
Prabha Praneetha
2 years ago

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்துள்ளது.
இதன்படி 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் அங்கு நிகழ்ந்துள்ளன.
சீனாவில் 2022 இல் மக்கள் தொகை 140 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2021 ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புக்கள் 850,000 ஆல் குறைந்துள்ளன.இதன்படி, 2021ஆம் ஆண்டைக்காட்டிலும் 2022இல் சீனாவின் சனத்தொகை 7.52 வீதத்தினால் குறைந்துள்ளதாக சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
ஒப்பீட்டு அளவில், 2021 இல், அமெரிக்காவில் 1,000 பேருக்கு 11.06 குழந்தைகளும், இங்கிலாந்தில் 10.08 பிறப்புகளும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னால் தள்ளி இந்தியாவில் அதே ஆண்டு பிறப்பு விகிதம் 16.42 ஆக இருந்தது.
இதேவேளை கடந்த ஆண்டு சீனாவில் முதன்முறையாக பிறப்பு எண்ணிக்கையை விட இறப்புகள் அதிகரித்துள்ளன .



