500,000 வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியாவிற்கு வருகை தருவர்கள் என எதிர்பார்ப்பு
#world_news
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
இந்த வருடம் மலேசியாவிற்கு 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களால் மலேசியர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மலேஷியா - பூசிங் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
15 ஆசிய நாடுகளிலிருந்து அந்த ஊழியர்கள் வரவழைக்கப்படுவர் என்றும் உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டாத தோட்டத்தொழில், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.



