உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த ஷாருக்கான்
#Cinema
#Actor
Prabha Praneetha
2 years ago
.jpg)
உலக பணக்கார நடிகர்களின் பட்டியில் இந்திய நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். உலகின் பணக்கார நடிகர்களின் பெயர் பட்டியலை ‘வேர்டு ஸ்டேடடிக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜெர்ரி சீன்ஃபீல்ட் ஒரு பில்லியன் டாலருடன் முதலிடத்திலும்.
டைலர் பெர்ரி ஒரு பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 770 மில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
மீதமுள்ள நடிகர்களில் டாம் குரூஸ், ஜாக்கி சான், ஜார்ஜ் குளூனி மற்றும் ராபர்ட் டி நீரோ ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.



