பிரித்தானியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை

#world_news #UnitedKingdom #Britain #government #Plastic
Nila
2 years ago
பிரித்தானியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை  விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை

பிரித்தானியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது பற்றிப் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சுற்றுப்புறம் மாசுபடுவதைக் குறைக்கவும் வருங்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான சுற்றுச்சூழலை வழங்கவும் உதவும் என்று கருதப்படுகிறது. 

கரண்டிகள், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களே உலகின் பெருங்கடல்களில் அதிக அளவு குப்பைகளாய்ச் சேர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1.1 பில்லியன் பிளாஸ்டிக் தட்டுகள் வீசி எறியப்படுகின்றன. 

ஆண்டுதோறும் 4 பில்லியனுக்கும் மேற்பட்ட கரண்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தூக்கி வீசப்படுகின்றன. அவற்றில் 10 விழுக்காட்டுப் பொருள்களே மறுபயனீடு செய்யப்படுகின்றன. 

ஸ்காட்லந்திலும் வேல்ஸிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், கலக்கிகள், பஞ்சுக் குச்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த 2020ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!