குறைந்த பட்ஜெட்டில் கடந்த ஆறு மாதத்திற்குள் சூப்பர் ஹிட் அடித்த 3 படங்கள்

சினிமா திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி ஹிட்டாகுவதெல்லாம் சகஜம் தான். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் கடந்த ஆறு மாதத்திற்குள் வெளியான 3 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் சிறப்பு என்னவென்றால் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற வெவ்வேறு மூன்று மொழிகளில் வெளியான 3 படத்தை இயக்கியவர்கள்தான் அதில் நடித்து மெகா ஹிட் கொடுத்திருக்கின்றனர். அதிலும் லவ் டுடே திரையரங்குகளில் ரசிகர்களை சிரிக்க வைத்து கண்ணீர் வர வைத்துள்ளது.
காந்தாரா: கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து நிலைத்து நிற்கிறது. நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பழங்குடியினர் பிரச்சினையை ஆன்மீகத்துடன் ஒப்பிட்டு சொன்ன இந்த படம் சமீபத்தில் வந்த படங்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்தது.
இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை காட்சிகளும் ரசிகர்களை மெய் சிலருக்கு வைக்கும் அளவுக்கு இருந்தது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இந்த படம், அதன் பிறகு பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே: நவம்பர் 4ம் தேதி வெளியான குறைந்த லவ் டுடே படம் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் லவ் டுடே படம் இப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது. முதலில் தமிழில் வெளியான இந்த படம் அதன் பிறகு பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஹிட் கொடுத்தது. அதுமட்டுமின்றி இந்த படம் உருவான பட்ஜெட்டில் இருந்து 7 மடங்கு லாபம் பார்த்து 70 கோடியை அசால்டாக வசூலித்தது.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே: மலையாளத்தில் சியர்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் லட்சுமி வாரியர் மற்றும் கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இதில் இயக்குனர் விபின் தாஸ் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான இந்த படத்தில் குடும்ப வன்முறை என்ற மிகப்பெரிய பிரச்சனையை நகைச்சுவையாக கையாண்டு மிக எதார்த்தமாக இருக்கக்கூடிய படமாக சித்தரித்தனர். இதனால் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 5 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 42 கோடியை அசால்ட்டாக குவித்து சாதனை படைத்தது.
இவ்வாறு இந்த 3 இயக்குனர்களும் எந்தவித தலையிடும் இல்லாமல் அவர்கள் நினைத்த கதையை படமாக்கி அதில் நடித்தும் வெற்றி கண்டுள்ளனர். இதேபோன்று இயக்குநர்களின் போக்கில் விட்டால் அவர்கள் எண்ணம் செயல்பட்டு வெற்றியும் கிடைக்கும். இதை கடந்த 6 மாதத்தில் இந்த 3 இயக்குனர்களும் திரை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடியதால் டாப் ஹீரோக்களை நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.



