நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக படங்களில் கமிட்டாகாமல் மார்க்கெட் இழந்து இருப்பதற்கான காரணம்

நகைச்சுவை நடிகர்,வைகைப்புயல் என பல பேரும், புகழும் கொண்ட நடிகர் வடிவேலு. சினிமாவில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். காமெடி என்றாலே வடிவேலுவின் பெயரை சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு திறன் உச்சம் பெற்றிருக்கும். இன்று வரை மீம்ஸ்களில் வடிவேலுவின் முகத்தை எப்போதுமே நெட்டிசன்கள் பயன்படுத்தி சிரிக்க வைத்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட நடிகரின் சினிமா கேரியர் ஒருநாள் கடலில் மூழ்கிய கப்பல் போல் கவிழ்க்கப்பட்டது. அதற்கான காரணம் அவர் தேவையில்லாமல் பேசிய வார்த்தைகளால் தான். வடிவேலு என்னதான் திரையில் காமெடியாகவும், ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை அவமானப்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளில் நடித்தாலும் அவர் உண்மையான குணம் சற்று வேறு தான்.
இப்படி இருக்கையில் ஒருமுறை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது வடிவேலு தி.மு.க கட்சியில் சேர்ந்து நட்சத்திர பேச்சாளராக களமிறங்கி பல இடங்களுக்கு சென்று அந்த கட்சி சார்பில் பிரச்சாரம் செய்தார்.அந்த சமயத்தில் நடிகரும், கேப்டனுமான விஜயகாந்த் தன் தேமுதிக கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கினார். அந்த சமயத்தில் வடிவேலுவின் பிரச்சாரம் விஜயகாந்தை வறுத்தெடுக்கும் வகையில் அமைந்தது.
விஜயகாந்தை குடிகாரன் என்றும் எந்த கப்பலுக்கு அவர் கேப்டன் என்றும் பேசிய வடிவேலு ஒருகட்டத்தில் அவன் இவன் என்றல்லாம் ஒருமையில் சரளமாக விஜயகாந்தை பேசினார். அந்த சமயத்தில் திமுக கட்சியும் வடிவேலுவின் பேச்சு கண்டிப்பாக விஜயகாந்தை தோற்கடிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக விஜயகாந்த் அந்த தேர்தலில் திமுகாவை வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றார்.
அதன் பின்னர் விஜய்காந்த் அதிகாரத்தில் அமர்ந்து வடிவேலு பேசிய பேச்சுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அவரை எந்த படத்திலும் கமிட் செய்ய விடாமல் செய்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே வடிவேலுவை தூக்கி வீசினார். அன்று போன வடிவேலுவின் மார்க்கெட் இன்றுவரை மீள முடியாமல் தவித்து வருகிறார். தவளை தன் வாயாலே கெடும் என்ற பழமொழி வடிவேலுவின் வாழ்க்கையில் கட்சிதமாக பொருந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



