விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவு படமா யாருக்கு வெற்றி அதிகம்?

தற்போது இணையத்தில் அனல் பறக்கும் விவாதம் என்னவென்றால் துணிவு, வாரிசு இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெறும் என்பதுதான். ஏனென்றால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக பார்க்கப்படும் அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இந்த பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொள்ள இருக்கிறது.
ஆகையால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையத்தை அலோலப்படுத்தி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பு சென்சருக்கு அனுப்பப்படும். ஒரு படத்தின் தரம் குறித்து ஆராய்ச்சி செய்து சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் வாரிசு மற்றும் துணிவு சென்சருக்கு அனுப்பப்பட்டது.
இதனால் சென்சாரில் உள்ள குழு வாரிசு, துணிவு இரண்டு படத்தையும் பார்த்துள்ளனர். இவர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் யாருக்கு வெற்றி என்று ஓரளவு கணிக்க முடிகிறது. அதாவது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள துணிவு படத்தில் செகண்ட் ஆஃபில் ஆக்சன் அதிகமாக உள்ளதாகவும் ஃபர்ஸ்ட் ஆஃபில் அதைவிட குறைவு என்று கூறப்படுகிறது.
அதேபோல் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி எடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சி அதிகமாக நிறைந்துள்ளதாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீருடன் தான் தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆகையால் இந்த படம் மக்களுக்கு பிடித்தால் பிளாக்பஸ்டர் ஹிட், அதுவே கவரவில்லை என்றால் அதல பாதாளத்திற்கு செல்லும். காரணம் சென்டிமென்ட் ஆக இருப்பதால் குடும்பங்கள் மட்டுமே பார்க்கும் படமாக இருக்கும். எனவே கத்தி மேல் நிற்பது போல தான் தற்போது வாரிசு படத்தின் நிலைமை.
இதனால் வாரிசு படம் விஜய் ரசிகர்களை திருப்தி படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் துணிவு படம் மங்காத்தா ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சென்சார் விமர்சனம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் படம் வெளியானால் மட்டுமே உண்மையான விமர்சனம் தெரியவரும்.



