அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கும் ஜி.பி. முத்து
Nila
2 years ago

அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’ஏகே 62’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு சில காரணங்களால் திடீரென வெளியேறிய ஜிபி முத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் தனது பேட்டியில் ’அஜித் சார் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நிச்சயம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



