இன்றைய வேத வசனம் 03.11.2022: தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 03.11.2022: தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். (சங்கீதம் 51:10)

தாவீது தன்னுடைய சோதனையின் வீழ்சிக்குப் பின்பாக இவ்விதம் எழுதுகிறான். தாவீது தேவனை அதிகம் நேசித்தவன். அதிக பக்தியைக்கொண்டிருந்த மனிதன். ஆனாலும் இவ்விதமான ஒரு படுகுழியில் விழுவான் என்று ஒருகாலும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.

ஆம்! பத்சேபாளிடத்தில் பவாம் செய்து, தேவனைத் துக்கப்படுத்தினான். எவ்வளவுபெரிய தேவ மனிதன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டாலும், புதுபித்துக்கொள்ளவில்லையென்றால், சோதனை நேரத்தில் அவன் விழுந்துவிட ஏதுவுண்டு.

அவன் மனந்திரும்பி தேவனை நோக்கி ஜெபித்த ஜெபம்தான் 51ம் சங்கீதம்.
‘தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும்’ தாவீது, ஆண்டவரே என் இருதயத்தின் நிலை மிகவும் சீர்கேடானதாயிருக்கிறது, நீரே அதைச் சுத்தப்படுத்த முடியும். சுத்த இருதயத்தை எனக்குத் தாரும் என்று ஜெபிக்கிறான்.

‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)  
நம் இருதயத்தில் சுத்தமான எண்ணங்களும், அசுத்த சிந்தனைகளும், இருக்குமானால் தேவனுக்கும் நக்கும் எப்படி தொடர்பு இருக்கமுடியும்?

நம் அசுத்தத்தை அறிக்கையிட்டு, சுத்த இருதயத்தை பெறவும், அனுதினமும் சுத்திகரிக்கப்படவும், நாம் தவறாமல் ஜெபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்லுகிறது.

மேலும் தாவீது இவ்விதம் தேவனிடத்தில் ஜெபிக்கிறார். ஆண்டவரே! நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்’ என்று!

நாம் எவ்வளவு ஒரு ஸ்திரமான ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டிராதவர்களாய்யிருக்கிறோம்! எவ்வளவு சீக்கிரம் நம் ஆவிக்குரிய வாழ்வில் குளிர்ந்துவிடுகிறோாம், எவ்வளவு சீக்கிரம் ஜெப ஜீவியத்தை விட்டுவிடுகிறோம், எவ்வளவு சீகிரத்தில் தேவனுடைய வார்த்தையைக் குறித்த தாகத்தை இழந்துவிடுகிறோம்! என்பதை சிந்திப்போம்!

அன்பானவர்களே! உங்களுடைய நிலை இவ்விதமாக இருக்குமானால் தாவீதைபோல தேவனை நோக்கிக் கதறுங்கள். தேவன் உங்ககளில் நிலைவரமான ஆவியைத் தருவார். ஆமென்!