ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல்- 19 பேர் உயிரிழப்பு

#Afghanistan #BombBlast #Death
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல்- 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியைட் பகுதியில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக கருதப்படும் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர்கள் ஹசாரா சமூகத்தை குறி வைத்து தாக்குல் நடத்தி வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக தற்போது ஷியைட் பகுதியில் வாழும் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

எனினும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!