யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம்

Kanimoli
2 years ago
யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம்

யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களால், மாநகர சபைக்கு உட்பட்ட பலசரக்கு வர்த்தக நிலையங்கள், அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்கு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், ஒரு வர்த்தக நிலையத்தில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிவான் 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!