மகனின் கல்லறையில் கேக் வெட்டி பார்ட்டி நடத்திய தாய் - விமர்சனங்களுக்கு பதிலடி

Prasu
2 years ago
மகனின் கல்லறையில் கேக் வெட்டி பார்ட்டி நடத்திய தாய் - விமர்சனங்களுக்கு பதிலடி

பிரித்தானியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம், மூளைச்சாவு அடைந்ததால் உயிர் ஆதரவு (life support) நிறுத்தப்பட்டு உயிரிழக்கச்செய்த 12 வயது சிறுவன் ஆர்ச்சி பேட்டர்ஸ்பீயின் தாய், கடந்த வெள்ளிக்கிழமை மகனின் கல்லறை மீது கூடாரம் அமைத்து, கேக் வெட்டி கொண்டாடியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.அனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கூறி தன்னை ட்ரோல் செய்த்தவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்ச்சி பேட்டர்ஸ்பீயின் தாய் ஹாலி டான்ஸ், அவரது கல்லறை மேல் கூடாரம் போட்டு, பார்ட்டி நடத்தியதாகவும், அந்த விழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்டதாகவும், இசைக்கச்சேரி நடத்தியதாகவும், சவுத்எண்ட் கவுன்சிலுக்கு குடியிருப்புவாசிகளால் புகார் அளிக்கப்பட்டது.ஆனால், வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் இசையும் மதுவும் இருந்ததாகக் கூறப்படுவதை ஹோலி டான்ஸ் மறுக்கிறார்.

அவர் தனது மகனின் கல்லறையில் நடந்த அந்த பார்ட்டி தனது பிறந்தநாளைக் குறிக்கிறது என்றும் இசை அல்லது மதுபானம் இல்லை என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

ஹாலி டான்ஸ் (Hollie Dance) கூறுகையில், வெள்ளியன்று தான் கல்லறையில் கூடாரம் வைத்திருந்தேன், ஏனெனில் அன்று மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியானது.யாரோ ஒருவர் எனக்கு ஒரு ஸ்டார்பக்ஸ் காபி மற்றும் ஒரு பாக்ஸ் மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்தால், அது உடனே பிறந்தநாளுக்கான பார்ட்டி கொண்டாட்டம் என்று சொல்வார்கள், அதனால் நாங்கள் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளவேண்டும், அப்படித்தானே.., இல்லையெனில் அது முட்டாள்தனம் என்று கேவி எழுப்பி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும், மக்கள் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் அனுப்பியதாகவும், மகனின் கல்லறையில் போலி தூக்கு கயிறுகள் போட்டு தங்களை மனா உளைச்சலுக்கு தள்ளுவதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 6ம் திகதி உயிர் ஆதரவு நிறுத்தப்பட்ட ஆர்ச்சி, இம்மாதம் 13ம் திகதி அடக்கம் செய்யப்பட்டார். ஆர்ச்சியின் இறுதிச் சடங்கு சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள பிரிட்டில்வெல், செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!