அமெரிக்காவில் பள்ளிக்குள் வாலிபர் புகுந்து துப்பாக்கி சூடு- 6 பேரின் நிலை கவலைக்கிடம்
#America
#School
#GunShoot
Prasu
2 years ago

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஒக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளிக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.



