சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்: 39,896 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்

Mayoorikka
2 years ago
சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்: 39,896 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்

2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, நாளொன்று 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று  (29)  “சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இவை தவிர குழந்தைகயின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளி சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம் என்றார்.

இதற்கமையவே எப்பாவெல பிரதேசத்தில் பெற்ற தகப்பன் உள்ளிட்ட உறவினர்கள்  30 பேரால் தொடர்ச்சியாக 6 வருடங்கள்  சிறுமியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்த அவர், 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும்  இந்த 9 வருடங்களில் இவர்களுள் 3882  பேரே தண்டனை அனுபவித்துள்ளனர் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!