கல்வி அமைச்சருக்கும் ஜப்பானிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!
Mayoorikka
2 years ago

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு நிபுனட பியசேவில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜப்பான் தூதுவரிடம் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும், கல்விக்கும் தீர்வுகளை வழங்குவதற்கு ஜப்பான் சகல வழிகளிலும் ஆதரவை வழங்கும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்,



