இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் இருந்து 15 இலட்சம் எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்ற ஆளுநர்
Prathees
2 years ago

ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 இலட்சம் ரூபாவை அவர் பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்த ஆளுநர் செப்டம்பர் 29ஆம் jpfதி நாடு திரும்ப உள்ளார்.
ஆனால் அவர் அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆளுநர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதுடன் மாகாணத்திலும் சில காலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
சில காலம் அந்த மாகாணத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.



