சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்த புலம்பெயர் தமிழ் பெண் செல்வராஜன் சுஸ்மீனா(Photos)

Prasu
1 year ago
சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்த  புலம்பெயர் தமிழ் பெண் செல்வராஜன் சுஸ்மீனா(Photos)

புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார்.

மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம் சுற்றி வரவேண்டும் என்ற ஆசையால் துறைசார் கல்வியை முடித்து இத்துறையைில் பணியாற்ற முன்வந்துள்ளார்.

பாடகியான இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டில் நடைபெற்ற Supper Star பாடல் போட்டி நிகழ்ச்சியிலும் பங்குகொண்டார்.

அத்துடன் புதிய ஆடைகளை உலகுக்கு காண்பித்தல் (Model) துறையிலும் தன்னை ஆர்வம் காட்டிவருகிறார்.

இவரின் பல்துறை சார் ஆற்றலை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் வாழ்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.