தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள்

#SriLanka #Arrest #Weapons #drugs #South #Navy #L4
Prasu
4 months ago
தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள்

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து, 1000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சர்வதேச கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருட்களுடன் மாத்திரமன்றி, சட்டவிரோத ஆயுதங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 08 பிஸ்டல்கள், 02 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள், 01 எம்-16 (M16) ரக நவீன துப்பாக்கி அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசின்கள் (Magazines) மீட்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது படகில் இருந்த 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4