ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் முடிவு ஆரம்பம்... சூளுரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..!
Nila
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் கதை மிக விரைவில் நிறைவு பெறும் என பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைகளை பெரிது படுத்திக் கொள்ளுமாறும், மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வருமாறும் தான் கோரிக்கை விடுவதாகவும் வசந்த முதலிகே சூளுரைத்துள்ளார்.
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் மக்களுக்கு நினைவூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



