சூரரை போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிப்பு
#TamilCinema
#Cinema
#India
Kobi
2 years ago

68-வது தேசிய விருதிற்கான பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தது போல சூரரை போற்று திரைப்படம் விருதுகளை குவித்துள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று, மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு உயரிய அங்கிகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி சூரரை போற்று படத்திற்காக ,
- சிறந்த நடிகர் - சூர்யா
- சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி
- சிறந்த பின்னணி இசை - ஜி. வி. பிரகாஷ்குமார்
- சிறந்த திரைப்படம் - சூரரை போற்று
- சிறந்த திரைக்கதை - சூரரை போற்று



