விக்ரமின் தற்போதைய நிலைமை..

சியான் விக்ரம் பற்றி கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வதந்திகள் பரவி வந்தது.
அதாவது விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி இருந்தது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த மனக் கவலையில் இருந்தனர்.
ஆனால் அவரது மேனேஜர் மற்றும் மகன் துருவ் விக்ரம் இருவரும் சாதாரண நெஞ்சுவலி காரணமாக விக்ரம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், இணையத்தில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவித்தனர். மேலும் விரைவில் விக்ரம் வீடு திரும்புவார் என கூறியிருந்தனர்.
அதேபோல் நேற்று சிகிச்சை முடிந்தவுடன் விக்ரம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
ஆனால் உடல்நிலை பிரச்சினை இருந்ததால் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
முதல் கட்டமாக இப்படத்தின் மூன்று பாடல்கள் சிங்கிள் ட்ராக் முறையில் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நாளை கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா பீனிக்ஸ் மாலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் ஏஆர் ரகுமானின் லைவ் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



