மன்னார் - நொச்சிக்குளத்தில் வாள்வெட்டு: வெளிவந்த தகவல்

Mayoorikka
2 years ago
மன்னார் - நொச்சிக்குளத்தில் வாள்வெட்டு: வெளிவந்த தகவல்

மன்னார் - நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நொச்சிக் குளத்தை சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் சகோதரர்கள் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினமான நேற்று (10) உயிரிழந்தவர்களின் மூத்த சகோதரர் ஒருவரும், மேலும் ஒருவரும் நொச்சிக்குளத்தில் உள்ள  மாட்டு வண்டி சவாரியில் வெற்றி பெற்ற ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் இருவர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிலங்குளத்ததை சேர்ந்த சகோதரர்களான  யேசுதாசன் றோமியோ (வயது -40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (வயது-33) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இவர்களின் சகோதரர் ஒருவரும், உறவினர் ஒருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!