தனியார் பேரூந்து சேவையில் நெருக்கடி!
Prabha Praneetha
2 years ago

டீசல் பற்றாக்குறை காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000 பேருந்துகள்) மாத்திரமே நாட்டில் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இக்கட்டான நேரத்தில், மொத்த பேருந்துகளில் 50% (18,000) சேவையில் ஈடுபட்டு வந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
டீசலைப் பெற்றுக்கொள்ள பேருந்துகளை நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள், தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக விஜேரத்ன கூறியுள்ளார்.



