பஸ் கட்டண அதிகரிப்பின் எதிரொலியால் புகையிரதப்பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை

பஸ் கட்டண அதிகரிப்பையடுத்து ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புகையிரதப்பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ,மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்தால் புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும் பொது நிர்வாக சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



