பாகிஸ்தானில் பள்ளி வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 ஆசிரியர்கள் மற்றும் 7 மாணவர்கள் மரணம்
#Death
#Student
#Pakistan
#Building
#Teacher
#collapse
Prasu
2 hours ago

பாகிஸ்தானில் டியூசன் சென்டர் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 ஆசிரியர்கள், 7 மாணவர்கள் உயிரிழந்தனர்.
லாகூருக்கு வடமேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹபீசாபாத் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டியூஷன் சென்டரின் கூரை இடிந்து விழுந்தபோது வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
மீட்புப் பணியாளர்கள், ஆறு முதல் பத்து வயது வரையிலான ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டனர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சமீபத்திய பலத்த மழை கட்டிடத்தை பலவீனப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
(வீடியோ இங்கே )



