பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை - உலக வங்கி
#SriLanka
#Bank
Reha
3 years ago

போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதனால், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து ஆலோசனை வழங்குவதாகவும் உலக வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.



