விஜயின் அடுத்த கட்டம் அரசியல்?
#Cinema
Shana
2 years ago

நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார்.
தமிழின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பில் தீவிரமாகியுள்ளார். அவரது 66ஆவது படத்தில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தெலங்கானா சென்றுள்ள நடிகர் விஜய் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார்.தன்னுடைய நீலாம்பூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



