சற்று முன்னர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த
Nila
3 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
இதனை பிரதமரின் மகன் ரோஹித ராஜபக்ச சிங்கள ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரது இராஜினாமா வந்துள்ளது.
இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.



