எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை- அமைச்சர் தெரிவிப்பு
#SriLanka
#Fuel
#Minister
Mugunthan Mugunthan
3 years ago

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப்புறம்பானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்குப்புறம்பானது என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமோ அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



